< Back
கிரிக்கெட்
சர்வதேச டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகள்: அஷ்வின், பும்ராவை முந்திய ஹர்திக் பாண்ட்யா...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

சர்வதேச டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகள்: அஷ்வின், பும்ராவை முந்திய ஹர்திக் பாண்ட்யா...!

தினத்தந்தி
|
7 Aug 2023 5:46 PM IST

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டிரினிடாட்,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து 0-2 என்ற கணக்கில் தொடரில் பின்னிலையில் உள்ளது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 153 ரன் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் அஷ்வின், பும்ராவை பின்னுக்கு தள்ளி 3 இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா 73 விக்கெட்டுகளுடன் 3ம் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 72 விக்கெட்டுகளுடன் 4ம் இடத்திலும், ஜஸ்ப்ரித் பும்ரா 70 விக்கெட்டுகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகள்