< Back
கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் - ஜேம்ஸ் ஆண்டர்சன் புது சாதனை

Image Courtesy: AFP

கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் - ஜேம்ஸ் ஆண்டர்சன் புது சாதனை

தினத்தந்தி
|
28 Aug 2022 8:54 AM IST

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார். இதுவரை டெஸ்டில் 664, ஒருநாள் போட்டியில் 269 மற்றும் டி20-ல் 18 விக்கெட்டுகள் என 367 போட்டிகளில் மொத்தம் 951 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இவருக்கு முன்னதாக இலங்கையின் முத்தையா முரளிதரன் (1347), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (1001), இந்தியாவின் அனில் கும்ப்ளே (956) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

மேலும் செய்திகள்