< Back
கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்

கோப்புப்படம் PTI

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்

தினத்தந்தி
|
14 Aug 2024 4:24 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடர் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

செப்டம்பர் 1-ந்தேதி முதல் மோர்னே மோர்கல் தனது பயிற்சி அளிக்கும் பணியை தொடங்க உள்ளார். ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்பட்டபோது மோர்னே மோர்கல் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்