< Back
கிரிக்கெட்

Image Courtesy : X (Twitter)
கிரிக்கெட்
தெலுங்கானா டி.எஸ்.பி.யாக பதவியேற்றுக் கொண்ட முகமது சிராஜ்

12 Oct 2024 7:33 AM IST
தெலுங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
ஐதராபாத்,
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இந்திய வீரர் முகமது சிராஜ்-க்கு குரூப் 1 அரசு பணி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.
அந்த வகையில், தெலுங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.