< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து முகமது யூசுப் விலகல்
|29 Sept 2024 2:58 PM IST
பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து முகமது யூசுப் விலகியுள்ளார். பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இவர் ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.