< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.பி.எல். போட்டியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்
|23 April 2024 4:11 AM IST
தாயகம் திரும்பி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ளும்படி மிட்செல் மார்ஷுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் 32 வயதான மிட்செல் மார்ஷ் முதல் 4 ஆட்டங்களில் ஆடி 61 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியின் போது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. சீக்கிரமாக குணமடையாததால், தாயகம் திரும்பி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ளும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.
இதையடுத்து அவர் சொந்த நாட்டுக்கு சென்று விட்டார். எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதற்காக அவர் இந்தியாவுக்கு திரும்புவார் என்று நினைக்கவில்லை என டெல்லி பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் நேற்று தெரிவித்தார். எனவே டெல்லி அணியில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.