சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்த மின்மினி செயலி
|சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் ஒவ்வொரு போட்டியின்போதும் பயனர்களுக்கு சிறப்பான பரிசுகளை கொடுக்க மின்மினி திட்டமிட்டுள்ளது.
சென்னை,
உலகின் முதல் தமிழ் ஹைப்பர்லோக்கல் செயலி என்கிற பெருமித அடையாளத்துடன் கடந்த ஜனவரி 22-ம் தேதி மின்மினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் மின்மினி செயலியை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோட் செய்துள்ளனர். மேலும் இன்னும் சிறப்பான விதத்தில் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்துள்ளது மின்மினி. கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய, தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான அன்பை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது மின்மினி.
இந்த இணைப்பு குறித்து மின்மினியின் செயல் துணை தலைவர் எஸ்.ஸ்ரீராம் கூறியதாவது:-
இது எங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான தருணம், சிஎஸ்கே அணியுடன் இணைவதன் மூலம் அதன் கோடிக்கான ரசிகர்களுடனும், குறிப்பாக தமிழக மக்களுடனும் மிக நெருக்கமாக பயணிக்க போகிறோம் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம் சென்னையில் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடும் ஒவ்வொரு போட்டியின்போதும் எங்களது பயனர்களுக்கு சிறப்பான பரிசுகளை கொடுக்க திட்டமிட்டுளோம். ஆர்வமுள்ள பயனாளர்கள் நம் சிஎஸ்கே அணியையும், வீரர்களையும் வாழ்த்தி #minminiCSK என்ற ஹாஸ்டேக்-உடன் வீடியோவை மின்மினியில் வெளியிட வேண்டும்.
இந்த போட்டியில் பயனர்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் வெளியிடப்போகும் அனைத்து வீடியோக்களையும் எங்கள் மின்மினி நடுவர் குழு பார்த்துப் பரிசீலனை செய்த பிறகு வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடைபெறும் நாளிற்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு நடுவர் குழு தேர்வு செய்த வெற்றியாளர்களின் விவரம் மின்மினி செயலியில் அறிவிக்கப்படும்.
உலகத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் மின்மினி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் எண்ணங்களையும்,உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு அம்சத்தையும் மின்மினி செயலியில் கொண்டுவந்துள்ளோம். இதில் பயனர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தலாம்,பிற பயனர்களுடன் கலந்துரையாடலாம்,பொது மற்றும் தனிப்பட்ட குழுக்களை உருவாக்கலாம்.
மின்மினி அனைவருக்குமான டிஜிட்டல் தளமாக செயல்படும் குறிப்பாக கன்டென்ட் கிரியேட்டர்கள்,அங்கீகரிப்பட்ட ரிப்போர்ட்டர்கள் மற்றும் சிட்டிசன் ஜர்னலிஸ்ட்கள் மேலும் எங்கள் அணியால் பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டி சேனல் நெட்வொர்க் குழுக்கள் என அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான வாய்ப்பை மின்மினி வழங்குகிறது
இத்தனைக்கும் மகுடம் வைத்தது போல தற்போது சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது, எங்களது இளம் மின்மினி குழுவிற்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது மேலும் சிஎஸ்கே ரசிகர்களை குதூகலப்படுத்தும் நோக்கில் எங்களது முயற்சிகள் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்மினி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணைப்பு குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் கூறுகையில் "உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் இருந்து அறிமுகமாகியுள்ள மின்மினி செயலியுடன் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும் கொடுக்கிறது.இந்த இணைப்பின் மூலம் தமிழ்நாடெங்கும் உள்ள சிஎஸ்கே ரசிகர்களுக்கு பல ஆச்சர்யமூட்டும் அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.
மின்மினி செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள், சி.எஸ்.கே போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட்களை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.