< Back
கிரிக்கெட்
 ∫ 1 dx = x + C... இதனால் தான், இந்தியா வென்றது... : மைக்கேல் வாகனை பங்கமாய் கலாய்த்த அஸ்வின்
கிரிக்கெட்

" ∫ 1 dx = x + C... இதனால் தான், இந்தியா வென்றது..." : மைக்கேல் வாகனை பங்கமாய் கலாய்த்த அஸ்வின்

தினத்தந்தி
|
28 Jun 2024 8:21 AM IST

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

கயானா,

டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

இதனிடையே உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு சாதகமாக அனைத்து சூழல்களும் மாற்றப்படுவதால் தான் இந்திய அணி வெற்றி பெறுவதாக குற்றச்சாட்டி வந்தனர். குறிப்பாக அரையிறுதி போட்டியில் மற்ற அணிகள் எங்கு விளையாடப் போகிறது என்று தெரியாமல் இருந்த சூழலில் இந்தியாவுக்கு மட்டும் அரையிறுதி ஆட்டம் கயானாவில் நடைபெறப்போகிறது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது ஏன் என்றும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இங்கிலாந்தை 103 ரன்களில் சுருட்டியது. இங்கிலாந்து பேட்டிங் செய்த அதே மைதானத்தில் தான் இந்தியாவும் பேட்டிங் செய்து 171 ரன்கள் குவித்தது.

இந்த சூழலில் இந்திய அணியின் வெற்றிகுறித்து மைக்கேல் வாகன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி. இதுவரை நடந்த போட்டிகளில் மிகச்சிறந்த அணியாக இந்தியா உள்ளது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பது இங்கிலாந்துக்கு நிச்சயம் கடினமாக தான் இருக்கும். இந்தியா இது போன்ற குறைவாக சுழலும் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மைக்கேல் வாகனை இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கமாய் கலாய்த்துள்ளார். நகைச்சுவை மற்றும் அறிவுபூர்வமாக வெற்றிபெற்றதாக அஸ்வின் அதில் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், " ∫ 1 dx = x + C. ∫ a dx = ax+ C. ∫ xn dx = ((xn+1)/(n+1))+C ; n≠1... இதனால் தான் இந்தியா வென்றது" என்று அதில் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.




மேலும் செய்திகள்