< Back
டென்னிஸ்
மியாமி ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: AFP

டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
20 March 2024 5:41 PM GMT

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

மியாமி,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார். இந்த மோதலில் முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-1 என எளிதில் கைப்பற்றினார்.

ஆனால் அடுத்த இரு செட்களை படோசா 6-4, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுக்கு பின் களம் இறங்கிய முன்னணி வீராங்கை சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்