< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்கா டி20 லீக்: 5 அதிரடி வீரர்களை ஒப்பந்தம் செய்து மிரள வைத்த மும்பை கேப்டவுன் அணி

Image Courtesy: AFP/ @mipaltan

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா டி20 லீக்: 5 அதிரடி வீரர்களை ஒப்பந்தம் செய்து மிரள வைத்த மும்பை கேப்டவுன் அணி

தினத்தந்தி
|
11 Aug 2022 11:43 PM IST

வீரர்கள் ஒப்பந்தத்தில் முதல் பந்திலே மும்பை அணி சிக்சர் அடித்துள்ளது.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது.

இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

இந்த நிலையில் மும்பை அணி வாங்கியுள்ள கேப்டவுன் அணி முதல் கட்டமாக 5 முக்கிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. ககிசோ ரபாடா, சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், ரசித் கான், டெவல்ட் பிரிவிஸ் என 5 வீரர்களை மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதில் டெவல்ட் பிரிவிஸ் ஏற்கனவே மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அதே நேரத்தில் 2 வலுவான ஆல் ரவுண்டர்களை (சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன்) மும்பை அணி வாங்கி மிரள வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சில் ரபாடா, சுழலில் ரசித் என வீரர்கள் ஒப்பந்தத்தில் முதல் பந்திலே மும்பை அணி சிக்சர் அடித்துள்ளது.

மேலும் செய்திகள்