கும்ப்ளே, ஹைடன் தேர்வு செய்த உலகக்கோப்பை அணி...5 இந்திய வீரர்களுக்கு இடம்...!
|இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
மும்பை,
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அதில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்கள் கொண்ட அணியை இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் ஆகியோர் இணைந்து தேர்வு செய்துள்ளனர்.
இந்த அணியில் 5 இந்திய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், விக்கெட் கீப்பராக டி காக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கும்ப்ளே மற்றும் ஹைடன் தேர்வு செய்த உலகக்கோப்பை அணி விவரம்:
டி காக் (தென் ஆப்பிரிக்கா), ரோகித் சர்மா (இந்தியா, கேப்டன்), விராட் கோலி , ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), ஹென்ரிச் க்ளாசென் (தென் ஆப்பிரிக்கா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), மார்கோ யான்சென் (தென் ஆப்பிரிக்கா), முகமது ஷமி (இந்தியா), பும்ரா (இந்தியா), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா).