< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம்: பதிரனா, தேஷ்பாண்டே அணியில் இடம்பெறவில்லை...காரணம் என்ன..?
|1 May 2024 7:56 PM IST
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் சென்னை அணியில் பதிரனா, தேஷ்பாண்டே இடம்பெறவில்லை.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சாம் கர்ரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் சென்னை அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான பதிரனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இன்று களமிறங்கவில்லை என கெய்க்வாட் தெரிவித்தார். அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் மற்றும் ரிச்சர்ட் கிலீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கான காரணம் என்னவெனில்:-
பதிரனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் களமிறங்கவில்லை. தேஷ்பாண்டேவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.