< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மும்பைக்கு எதிரான ஆட்டம்: காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்... டெல்லி அணிக்கு பின்னடைவு
|6 April 2024 7:55 PM IST
ஐ.பி.எல். தொடரில் மும்பை - டெல்லி இடையிலான ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இதில் நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டெல்லி அணியிலிருந்து முக்கிய வீரரான ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். லேசான காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக டெல்லி அணியின் இயக்குனரான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இவரது விலகல் டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.