இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்; தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் - தசுன் ஷனகா
|பெரிய போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும் என்று எல்லோரும் விரும்புவதாக தசுன் ஷனகா தெரிவித்தார்.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷனகா நேற்று அளித்த பேட்டியில், 'நாங்கள் இறுதிப்போட்டிக்கு தயாராக இருக்கிறோம். போட்டியில் ஆடுகளம் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே நாங்கள் ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்.
இந்தியாவுக்கு எதிராக பந்து வீசுகையில் நாங்கள் தொடக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியமானதாகும். அது ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக திருப்ப வழிவகுக்கும். சரியான கட்டத்தில் நாங்கள் உச்சகட்ட பார்மை எட்டி இருக்கிறோம். எங்கள் வீரர்கள் நாட்டுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். பெரிய போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம். இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஆசிய கோப்பை போட்டியில் 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் ஆடுவது சிறப்பானதாகும்' என்று கூறினார்.