< Back
கிரிக்கெட்
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம்: பதிரனா ஏன் அணியில் இடம்பெறவில்லை..? சென்னை கேப்டன் விளக்கம்

image courtesy: PTI 

கிரிக்கெட்

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம்: பதிரனா ஏன் அணியில் இடம்பெறவில்லை..? சென்னை கேப்டன் விளக்கம்

தினத்தந்தி
|
5 April 2024 8:02 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் பிளேயிங் 11-ல் பதிரனா இடம்பெறவில்லை.

ஐதராபாத்,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக சென்னை அணி பிளேயிங் 11 மற்றும் இம்பேக்ட் வீரர்களுக்கான பட்டியலில் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பதிரனா பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கமளித்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், "இந்த போட்டிக்கு முன்னதாக ஏற்பட்ட லேசான காயம் காரணமாக பதிரனா அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மொயீன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்." என்று கூறினார்.

மேலும் செய்திகள்