20 ஓவர் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய ஸ்டோனிஸ்
|இலங்கை கேப்டன் ஹசரங்கா 2-வது இடத்துக்கும், ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) 3-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர் பிரிவில், நடப்பு உலகக் கோப்பை போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தும் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு இடம் உயர்ந்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதுவரை முதலிடத்தில் இருந்த ஆப்கானிஸ்தானின் முகமது நபி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் இலங்கை கேப்டன் ஹசரங்கா 2-வது இடத்துக்கும், ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) 3-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசின் அகில் ஹூசைன் 6 இடம் எகிறி 2-வது இடத்துக்கு வந்துள்ளார். இதனால் ஹசரங்கா ஒரு இடம் குறைந்து 3-வது இடத்துக்கு சரிந்தார். பேட்ஸ்மேன்கள் வரிசையில் சூர்யகுமார் யாதவ் (இந்தியா), பில் சால்ட் (இங்கிலாந்து), பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (இருவரும் பாகிஸ்தான்) முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகிறார்கள்.