சச்சின் டெண்டுல்கரை சந்தித்த மனு பாக்கர்
|இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, மனு பாக்கர் சந்தித்துள்ளார்.
மும்பை,
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றது. இதில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தான் வென்ற ஒலிம்பிக் பதக்கங்களுடன், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இன்று சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்த மனு பாக்கர், ஒரே ஒரு சச்சின் டெண்டுல்கர். இந்த சிறப்பு தருணத்தை கிரிக்கெட் ஐகானுடன் பகிர்ந்து கொள்வதை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அவரது பயணம் என்னையும் எங்களில் பலரையும் எங்கள் கனவுகளைத் துரத்தத் தூண்டியது. மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி சார் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.