பாபர் ஆசமை விட அதிக சம்பளம் வாங்கும் மந்தனா...சமூக ஊடகங்களில் வைரலாகும் மீம்ஸ்கள்...!
|பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் ஆசம் வாங்கும் சம்பளத்தை விட பெண்கள் பிரிமீயர் லீக்கில் மந்தனா அதிக சம்பளம் வாங்க உள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் ஆசம் வாங்கும் சம்பளத்தை விட பெண்கள் பிரிமீயர் லீக்கில் மந்தனா அதிக சம்பளம் வாங்க உள்ளார். இந்நிலையில் இதை வைத்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் அதிக அளவில் வைரலாகி வருகின்றன.
ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் போன்றே பெண்களுக்கும் 20 ஓவர் தொடர் நடத்த வேண்டும் என பல கோரிக்கைகளுக்கு வெற்றி கிட்டும் விதமாக பெண்கள் பிரிமீயர் லீக்கின் முதலாவது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் விளையாட உள்ளன.
இந்த 5 அணிகளுக்கும் வீராங்கனைகளை உறுதி செய்ய மும்பையில் நேற்று ஏலம் நடைபெற்றது. இதில் 5 அணி நிர்வாகங்களும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 87 வீராங்கனைகள் மொத்தம் ரூ.59½ கோடிக்கு விலை போனார்கள்.
இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக ரூ.3.40 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதேபோல் ஆஷ்லி கார்ட்னெரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், நதாலி சிவெரை ரூ.3.2 கோடிக்கு மும்பை அணியும், தீப்தி ஷர்மாவை ரூ. 2.6 கோடிக்கு உ.பி அணியும் ஏலத்தில் எடுத்தன.
இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் ஆசம் வாங்கும் சம்பளத்தை விட ஸ்மிருதி மந்தனா அதிக சம்பளம் வாங்க உள்ளார் என சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் ஆசம் ரூ. 2.3 கோடி சம்பளம் வாங்குகிறார்.
அவரை விர ஸ்மிருதி மந்தனா ரூ. 90 லட்சம் அதிக சம்பளம் வாங்க உள்ளார். இதை வைத்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.