< Back
கிரிக்கெட்
கொல்கத்தா அணி சாம்பியன் - வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜி
கிரிக்கெட்

கொல்கத்தா அணி சாம்பியன் - வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜி

தினத்தந்தி
|
26 May 2024 11:33 PM IST

சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் இன்று மோதின.

இந்த சூழலில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. முன்னதாக கடந்த 2012, 2014 -ல் ஐ.பி.எல். சாம்பியன் பட்டங்களை கொல்கத்தா அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "கொல்கத்தா நைட் ரைடர்சின் வெற்றி பெங்கால் முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சாதனை படைத்த வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை தனிப்பட்ட முறையில் வாழ்த்த விரும்புகிறேன். ஐ.பி.எல். தொடரில் இன்னும் பல வருடங்களுக்கு இதுபோன்ற வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்