< Back
கிரிக்கெட்
20 ஓவர் உலகக் கோப்பை போட்டி: 25-ந் தேதி அமெரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

கோப்புப்படம்

கிரிக்கெட்

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி: 25-ந் தேதி அமெரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

தினத்தந்தி
|
19 May 2024 3:50 AM IST

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஜூன் 5-ந் தேதி அயர்லாந்தை நியூயார்க்கில் சந்திக்கிறது.

புதுடெல்லி,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ'பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஜூன் 5-ந் தேதி அயர்லாந்தை நியூயார்க்கில் சந்திக்கிறது. முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஜூன் 1-ந் தேதி வங்காளதேசத்துடன் ஆடுகிறது. உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ஒரு பகுதியினர் வருகிற 21-ந் தேதி புறப்பட்டு செல்வார்கள் என்று முதலில் கூறப்பட்டது.

தற்போது, ஐ.பி.எல். போட்டியில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறாத அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணி வீரர்கள் வருகிற 25-ந் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த முதலாவது குழுவில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல் மற்றும் அணியின் பயிற்சி உதவியாளர்கள் செல்கிறார்கள். இந்திய அணியின் 2-வது குழுவினர், ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு வருகிற 27-ந் தேதி புறப்பட்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்