< Back
கிரிக்கெட்
மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்...!

Image Courtesy: @TexasSuperKings

கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்...!

தினத்தந்தி
|
18 July 2023 2:57 PM IST

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் டெவான் கான்வே 74 ரன்கள் எடுத்தார்.

டல்லாஸ்,

6 அணிகள் இடையிலான மேஜர் லீக் 20 ஓவர் (எம்.எல்.சி.) கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் பொல்லார்ட் தலைமையிலான எம்.ஐ. நியூயார்க் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் டு பிளெஸ்சிஸ் 8 ரன், கோடி செட்டி12 ரன், மில்லர் 17 ரன், சாண்ட்னெர் 27 ரன், பிராவோ 5 ரன், டேனியல் சாம்ஸ் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே அரைசதம் அடித்து அசத்தினார்.

அவர் 74 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எம்.ஐ அணி ஆடியது.

எம்.ஐ. நியூயார்க் அணியில் ஜஹாங்கீர் 41 ரன், மோனங் படேல் 0 ரன், ஸ்டீவன் டெய்லர் 15 ரன்,. நிக்கோலஸ் பூரன் 19 ரன், டிம் டேவிட் 24 ர, கைரன் பொல்லார்ட் 0 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் எம்.ஐ.நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களே எடுத்தது. இதன் மூலம் டெக்சாஸ் அணி 17 ரன் வித்தியாசத்தி வெற்றி பெற்று தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.

3 ஆட்டத்தில் ஆடியுள்ள டெக்சாஸ் அணி 2 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளது. எம்.ஐ.நியூயார்க் அணி 3 ஆட்டத்தில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்