< Back
கிரிக்கெட்
மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் வெற்றி

image courtey: twitter/@MLCricket

கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ. நியூயார்க் அணியை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் வெற்றி

தினத்தந்தி
|
15 July 2024 1:51 PM IST

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

டல்லாஸ்,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். போன்று அமெரிக்காவில் மேஜர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், பொல்லார்ட் தலைமையிலான எம்.ஐ. நியூயார்க் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற நியூயார்க் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் கான்வே மற்றும் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 61 ரன்களும், கான்வே 40 ரன்களும் அடித்தனர். நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூயார்க், ரஷீத் கான் மற்றும் மோனக் படேலின் அதிரடி ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்தது. இருப்பினும் கடைசி கட்டத்தில் டெக்சாஸ் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

20 ஓவர்களில் நியூயார்க் 7 விக்கெட்டுகளை இழந்து 161 மட்டுமே அடித்தது. இதன் மூலம் எம்.ஐ.நியூயார்க் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக மோனக் படேல் 61 ரன்களும், ரஷீத் கான் 50 ரன்களும் அடித்தனர். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

மேலும் செய்திகள்