< Back
கிரிக்கெட்
மேஜர் லீக் கிரிக்கெட்; டெக்சாஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சீட்டில் ஆர்கஸ்....!

Image Courtesy: @MLCricket

கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்; டெக்சாஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சீட்டில் ஆர்கஸ்....!

தினத்தந்தி
|
22 July 2023 9:21 AM IST

சீட்டில் ஆர்கஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

மோரிஸ்வில்லே,

மேஜர் லீக் கிரிக்கெட் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சீட்டில் ஆர்கஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

சீட்டில் ஆர்கஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் டெக்சாஸ் வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் டெக்சாஸ் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 127 ரன்களே எடுத்தது.

டெக்சாஸ் அணி தரப்பில் பிராவோ 39 ரன், டேனியல் சாம்ஸ் 26 ரன் எடுத்தனர். சியாட்டில் அணி தரப்பில் பார்னெல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய சீட்டில் ஆர்கஸ் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த தொடரில் சீட்டில் ஆர்கஸ் அணி பதிவு செய்த ஹாட்ரிக் வெற்றி இதுவாகும். 4 ஆட்டங்களில் ஆடியுள்ள டெக்சாஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.


மேலும் செய்திகள்