மேஜர் லீக் கிரிக்கெட்: சியாட்டில் ஓர்காஸ் அணியை வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ வெற்றி
|சான் பிரான்சிஸ்கோ தரப்பில் லியாம் பிளங்கெட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மோரிஸ்வில்லே,
6 அணிகள் கலந்து கொண்டுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் சியாட்டில் ஓர்காஸ் - சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சான் பிரான்சிஸ்கோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் மேத்தேயு ஷார்ட் 56 ரன்கள் எடுத்தார். சியாட்டில் ஓர்காஸ் தரப்பில் கேனன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சியாட்டில் அணி களம் இறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரியான் ரிக்கல்டன் 29 ரன், ஷெஹான் ஜெயசூரியா 54 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய டி காக் 2 ரன், கிளாசென் 6 ரன், ஆரோன் ஜோன்ஸ் 6 ரன், ஹர்மீத் சிங் 15 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் சியாட்டில் ஓர்காஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன் வித்தியாசத்தில் சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் வெற்றி பெற்றது. சான் பிரான்சிஸ்கோ தரப்பில் லியாம் பிளங்கெட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.