மேஜர் லீக் கிரிக்கெட்; 21 ரன் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் வெற்றி...!
|சான் பிரான்சிஸ்கோ அணி தரப்பில் மேத்யூ வேட் அதிரடியாக ஆடி 78 ரன்கள் அடித்தார்.
டல்லாஸ்,
மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் மேத்யூ வேட் 78 ரன்களும், ஆண்டர்சன் 39 ரன், ஸ்டாய்னிஸ் 37 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி ஆடியது.நைட் ரைடர்ஸ் அணியில் ஜேசன் ராய் 45 ரன், உன்முகுந்த் சந்த் 20 ரன், நிதிஷ் குமார் 31 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களே எடுத்து. இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோ அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு கடுமையாக போராடிய அதிரடி வீரர்கள் ரஸல் 42 ரன், நரைன் 28 ரன்னும் எடுத்தும் அணியை வெற்றி பெற செய்ய இயலவில்லை.