மேஜர் லீக் கிரிக்கெட்; எம்.ஐ.நியூயார்க் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற சான் பிரான்சிஸ்கோ
|சான் பிரான்சிஸ்கோ தரப்பில் மேத்யூ ஷார்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டல்லாஸ்,
6 அணிகள் கலந்து கொண்டுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்பட்டி இன்று காலை 6 மணிக்கு டல்லாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் எம்.ஐ.நியூயார்க் - சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. சான் பிரான்சிஸ்கோ தரப்பில் கோரி ஆண்டர்சன் 59 ரன்கள் எடுத்தார். எம்.ஐ.நியூயார்க் தரப்பில் நோஸ்துஷ் கென்ஜிகே மற்றும் பவுல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய எம்.ஐ.நியூயார்க் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 3 ரன் வித்தியாசத்தில் சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் திரில் வெற்றி பெற்றது.
எம்.ஐ.நியூயார்க் அணி தரப்பில் டெவால்ட் ப்ரீவிஸ் 56 ரன்கள் எடுத்தார். சான் பிரான்சிஸ்கோ தரப்பில் மேத்யூ ஷார்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.