< Back
கிரிக்கெட்
மேஜர் லீக் கிரிக்கெட்; வாஷிங்டன் அணியை வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் அணி அபார வெற்றி...!

Image Courtesy: @MLCricket

கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்; வாஷிங்டன் அணியை வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் அணி அபார வெற்றி...!

தினத்தந்தி
|
24 July 2023 7:10 AM IST

எம்.ஐ. நியூயார்க் அணி தரப்பில் நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.

மோரிஸ்வில்லே,

6 அணிகள் பங்கேற்றுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வாஷிங்டன் அணியும், எம்.ஐ. நியூயார்க் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வாஷிங்டன் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

வாஷிங்டன் அணி தரப்பில் க்ளென் பிலிப்ஸ் 47 ரன், ஹென்றிக்ஸ் 32 ரன்கள் எடுத்தனர். எம்.ஐ. அணி தரப்பில் பொல்லார்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எம்.ஐ அணி ஆடியது.

எம்.ஐ அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் படேல் 44 ரன், ஜஹாங்கீர் 29 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய பூரன், பொல்லார்ட் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் எம்.ஐ அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எம்.ஐ அணி தரப்பில் பூரன் 62 ரன்கள் எடுத்தார்.

மேலும் செய்திகள்