< Back
கிரிக்கெட்
மேஜர் லீக் கிரிக்கெட்; கான்வே, மில்லர் அரைசதம் - டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 181 ரன்கள் குவிப்பு...!

Image Courtesy: @TexasSuperKings

கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்; கான்வே, மில்லர் அரைசதம் - டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 181 ரன்கள் குவிப்பு...!

தினத்தந்தி
|
14 July 2023 8:17 AM IST

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

அமெரிக்கா,

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஐபிஎல்-ஐப் போன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் தொடர் இன்று ஆரம்பித்தது.

அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் மூலம் நடத்தப்படும் இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐபிஎல்-ஐ சேர்ந்த சென்னை,மும்பை,டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளின் உரிமையாளைர்களும் அணிகளை வாங்கி உள்ளனர்.

சென்னை அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியையும்,மும்பை அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும்,கொல்கத்தா அணி நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கி உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும்,லாஸ் ஏஜ்சலஸ் நைட் ரைடர்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர் கிங்ஸ் அணியில் டு பிளெஸ்சிஸ் டக் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய லஹிரு மிலந்தா 17 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து கான்வேயுடன், மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் கான்வே 55 ரன், மில்லர் 61 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லாஸ் ஏஞ்சலஸ் அணி ஆடி வருகிறது.



மேலும் செய்திகள்