< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கோல்ப் விளையாடிய மகேந்திர சிங் தோனி ..!!
|8 Sept 2023 11:01 AM IST
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கோல்ப் விளையாடியுள்ளார்.
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய காலிறுதி ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சி.எஸ்.கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கண்டு களித்தார்.
பின்னர், தோனியை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேஷனல் கோல்ப் கிளப்பில் அவருடன் கோல்ப் விளையாட ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் டிரம்புடன் தோனி கோல்ப் விளையாடும் புகைப்படத்தை துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சங்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
'இந்த நிகழ்வை எற்படுத்தியதற்கு நன்றி ஜனாதிபதி ' என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.