< Back
கிரிக்கெட்
குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு...!

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு...!

தினத்தந்தி
|
7 May 2023 3:05 PM IST

ஐபிஎல் தொடரில் சகோதரர்கள் கேப்டன்களாக எதிர் எதிர் அணியில் மோதுவதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ஆமதாபாத்,

16வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஆமதாபாத்தில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. லக்னோ அணியில் காயம் காரணமாக ராகுல் விலகிய நிலையில் குருணால் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார்.

குஜராத் அணியை ஹர்த்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஐபிஎல் தொடரில் சகோதரர்கள் கேப்டன்களாக எதிர் எதிர் அணியில் மோதுவதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்