< Back
கிரிக்கெட்
லக்னோ அபார பந்துவீச்சு... மும்பை 144 ரன்கள் சேர்ப்பு
கிரிக்கெட்

லக்னோ அபார பந்துவீச்சு... மும்பை 144 ரன்கள் சேர்ப்பு

தினத்தந்தி
|
30 April 2024 9:24 PM IST

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது.

லக்னோ,

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 48வது லீக் ஆட்டத்தில் லக்னோ - மும்பை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சூர்யகுமார் யாதவ் (10), திலக் வர்மா (7), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (0), அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களை எடுத்து திணறியது.

அப்போது நேகல் வதேரா மற்றும் இஷான் கிஷன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் நிதான ஆட்டத்தால் மும்பை அணி ஓரளவு கவுரவமான ஸ்கோரை எட்டியது. நிதானமாக விளையாடிய வதேரா 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 36 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் டிம் டேவிட் சில பவுண்டரிகள் விளாச, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்