< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
எங்கள் ரசிகர்களின் அன்பு... வைரலாகும் கம்பீரின் எக்ஸ் பதிவு
|6 April 2024 4:53 PM IST
மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவருடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் கவுதம் கம்பீர் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கவுதம் கம்பீர், தற்போது ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.
இந்நிலையில் இவர், மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவருடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதற்கு, "எங்கள் ரசிகர்களின் அன்பு. அதனால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்" என்ற தலைப்பிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.