< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் குட்டி தங்க உலகக்கோப்பை..!!
|13 Oct 2023 11:43 AM IST
தங்கத்திலான உலகக்கோப்பையை ரோகித் சர்மாவுக்கு வழங்க விருப்பம் இருப்பதாக அகமதாபாத்தை சேர்ந்த நகை வியாபாரி கூறியுள்ளார்.
ஆமதாபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட உள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தை சேர்ந்த நகை வியாபாரி ரவூப் ஷேக் என்பவர் 0.9 கிராம் எடையில் தங்கத்திலான உலகக்கோப்பை மாதிரியை 2 மாதத்தில் வடிவமைத்து அசத்தியுள்ளார். மேலும் இதனை நாளை நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வழங்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.