< Back
கிரிக்கெட்
மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணத்தை சீக்கிரம் முறியடிக்க முயற்சிப்போம் - தீப்தி சர்மா

Image Courtesy: @BCCIWomen

கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணத்தை சீக்கிரம் முறியடிக்க முயற்சிப்போம் - தீப்தி சர்மா

தினத்தந்தி
|
2 Jan 2024 4:27 AM IST

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

மும்பை,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளின் முடிவில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும், ஆறுதல் வெற்றிக்காக இந்தியாவும் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டம் குறித்து இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா கூறியதாவது, வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் ஒரு அங்கம். ஆனால் பேட்டிங்கோ அல்லது பந்து வீச்சோ ஒரு அணியாக முன்னேற்றம் கண்டுள்ளோம். அவர்களின் வெற்றிப் பயணத்தை முடிந்தவரை சீக்கிரம் முறியடிக்க முயற்சிப்போம்.

நமது அணியில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய போதெல்லாம் வெற்றிக்கு அருகில் கூட வரமாட்டோம். ஆனால் இப்போது வெற்றியை நெருங்குவது நல்ல அறிகுறியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்