< Back
கிரிக்கெட்
அவருக்கு நன்றி சொல்லணும் - ஆட்டநாயகன் இஷாந்த் சர்மா பேட்டி

Image Courtesy: X (Twitter)

கிரிக்கெட்

அவருக்கு நன்றி சொல்லணும் - ஆட்டநாயகன் இஷாந்த் சர்மா பேட்டி

தினத்தந்தி
|
15 May 2024 8:02 AM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

டெல்லி,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக போரெல் 58 ரன், ஸ்டப்ஸ் 57 ரன் எடுத்தனர்.

லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 19 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 61 ரன், அர்ஷத் கான் 33 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் இஷாந்த் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் இஷாந்த் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த சில போட்டிகளில் நான் நக்குல் பந்துகளை வீச முயற்சித்து வருகிறேன். கடந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கிய நான் இன்று கே.எல். ராகுலை அவுட்டாக்கினேன். அதை தவிர்த்து நான் அதிகமாக எதுவும் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு நாளும் வரும் சவால்களை எதிர்கொள்கிறேன். என்னுடைய உடல் நன்றாக இருக்கிறது.

அதற்கு நான் பட்ரிக் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் எனக்கு சில காயங்கள் இருந்தது. தோல்விகளை சந்தித்த போது நாங்கள் நேர்மறையாக தன்னம்பிக்கையுடன் இருந்தோம். நெருக்கமான போட்டிகளில் நீங்கள் வெல்லும் போது உங்களுக்கு முன்னோக்கி செல்வதற்கான தன்னம்பிக்கை தாமாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்