டி20 தொடரில் பதிலடி கொடுப்போம்... இந்திய அணிக்கு சவால் விட்ட நிக்கோலஸ் பூரன்
|ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை வென்று பதிலடி கொடுப்போம் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
டிரினிடாட்,
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. சிம்ரன் ஹெட்மயர் மற்றும் ஹோல்டர் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் வித்தியாசமான அணியாக இருக்கும். இந்த தொடரில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும். இந்திய அணியை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை வென்று பதிலடி கொடுப்போம். சிம்ரன் ஹெட்மயர் மீண்டும் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.