இங்கிலாந்தை தோற்கடித்து ஜேம்ஸ் ஆண்டர்சனின் பேர்வெல் பார்ட்டியை கலைப்போம் - வெஸ்ட் இண்டீஸ் வீரர்
|வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
லண்டன்,
கிரேக் பிராத்வைட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும்.
இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்கும் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து ஜேம்ஸ் ஆண்டர்சனின் பேர்வெல் பார்ட்டியை கலைப்போம் என வெஸ்ட் இண்டீஸ் வீரர் சமர் ஜோசப் ஜோசப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆண்டர்சன் அற்புதமான வீரர். நான் அவரைப் பார்த்து வளர்ந்தவன். இந்த லெவலில் மிகவும் தரமான அவர் வெற்றியுடன் விடை பெறுவது கச்சிதமாக இருக்கும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் முதல் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து ஆண்டர்சனின் பேர்வெல் பார்ட்டியை கலைக்க விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவில் விளையாடிய எங்களுடைய கடைசி பயணத்தில் இருந்த அதே எனர்ஜியை இங்கேயும் தொடர விரும்புகிறோம்.
இத்தொடரில் இங்கிலாந்துக்கு சவால் கொடுக்கும் எண்ணத்துடன் நாங்கள் இங்கே வந்துள்ளோம். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இடமாகும். குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் ஸ்டார்க், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அசத்தியதைப் போல நானும் செயல்பட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.