< Back
கிரிக்கெட்
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

Image Courtesy: @llct20

கிரிக்கெட்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
20 Sept 2024 8:41 AM IST

லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் இன்று தொடங்குகிறது.

ஜோத்பூர்,

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 'லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட்' தொடரின் முதல் இரு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இதில் இந்தியா கேப்பிடல்ஸ், மணிபால் டைகர்ஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன. இந்நிலையில் இந்த தொடரின் 3வது சீசன் இன்று தொடங்குகிறது.

ஜோத்பூர், சூரத், ஜம்மு, ஸ்ரீநகர் என 4 நகரங்களில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா, மணிபால் டைகர்ஸ், டோயம் ஐதராபாத், குஜராத் கிரேட்ஸ், சவுத்தெர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கி அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் (தகுதிச்சுற்று, வெளியேற்றுதல் சுற்று, அரையிறுதி) அக்டோபர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகின்றன. தொடரின் இறுதிப்போட்டி அக்டோபர் 16ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று தொடங்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இர்பான் பதான் தலைமையிலான கோனார்க் சூர்யாஸ் ஒடிசா - ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணியை ஜோத்பூரில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்