< Back
கிரிக்கெட்
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; அர்பன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பால் டைகர்ஸ்..!

Image Courtesy: @llct20

கிரிக்கெட்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; அர்பன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பால் டைகர்ஸ்..!

தினத்தந்தி
|
10 Dec 2023 6:52 AM IST

மணிப்பால் டைகர்ஸ் அணி தரப்பில் அசேல குணரத்ன 51 ரன்னும், ராபின் உத்தப்பா 40 ரன்னும் எடுத்தனர்.

சூரத்,

ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அர்பன்ரைசர்ஸ் ஐதராபாத் - மணிப்பால் டைகர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அர்பன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் ரிக்கி கிளார்க் 80 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மணிப்பால் டைகர்ஸ் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மணிப்பால் டைகர்ஸ் அணி தரப்பில் அசேல குணரத்ன 51 ரன்னும், ராபின் உத்தப்பா 40 ரன்னும் எடுத்தனர்.

மேலும் செய்திகள்