< Back
கிரிக்கெட்
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; மணிபால் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற கோனார்க் சூர்யாஸ் ஒடிசா

Image Courtesy: @llct20

கிரிக்கெட்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்; மணிபால் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற கோனார்க் சூர்யாஸ் ஒடிசா

தினத்தந்தி
|
21 Sept 2024 10:09 AM IST

இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா கேப்பிடல்ஸ் - டோயம் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

ஜோத்பூர்,

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 'லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட்' தொடரின் முதல் இரு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இதில் இந்தியா கேப்பிடல்ஸ், மணிபால் டைகர்ஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன. இந்நிலையில் இந்த தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது.

ஜோத்பூரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இர்பான் பதான் தலைமையிலான கோனார்க் சூர்யாஸ் ஒடிசா - ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கோனார்க் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கோனார்க் அணி தரப்பில் அதிகபட்சமாக இர்பான் பதான் 18 ரன்கள் எடுத்தார். மணிபால் தரப்பில் அனுரீத் சிங், பினார் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 105 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மணிபால் டைகர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 102 ரன் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 2 ரன் வித்தியாசத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி திரில் வெற்றி பெற்றது. மணிபால் தரப்பில் அதிகபட்சமாக ஒபுஸ் பினார் 34 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா கேப்பிடல்ஸ் - டோயம் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 3.00 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்