< Back
கிரிக்கெட்
லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட்: பில்வாரா கிங்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா கேப்பிடல்ஸ் அணி சாம்பியன்

Image Courtesy: Legends League Cricket

கிரிக்கெட்

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட்: பில்வாரா கிங்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா கேப்பிடல்ஸ் அணி சாம்பியன்

தினத்தந்தி
|
6 Oct 2022 5:08 AM IST

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பில்வாரா கிங்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா கேப்பிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜெய்பூர்,

ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று இரவு ஜெய்பூரில் நடைபெற்றது. இந்த இறுதி ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிடல்ஸ் அணியும், இர்பான் பதான் தலையிலான பில்வாரா கிங்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 82 ரன்களும், ஜான்சன் 62 ரன்களும், நர்ஸ் 19 பந்துகளில் 42 ரன்களும் அடித்தனர். பில்வாரா கிங்ஸ் அணி தரப்பில் ராகுல் சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பில்வாரா கிங்ஸ் அணி களம் இறங்கியது. இறுதியில் அந்த அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வாட்சன் 27 ரன்னும், ஜேசல் காரியா 22 ரன்னும் அடித்தனர்.

இந்தியா கேப்பிடல்ஸ் அணி தரப்பில் பவான் சுயல், பிரவீன் தாம்பே, பங்கஜ் சிங் தலா 2 விக்கெட்டும், மிட்செல் ஜான்சன், லியாம் பிளெங்கட், ரஜத் பாடியா தலா 1 விக்க்ண்ட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா கேப்பிடல்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்