< Back
கிரிக்கெட்
கடைசி டெஸ்ட்: கவாஜா சதம்... முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. அணி 255-4
கிரிக்கெட்

கடைசி டெஸ்ட்: கவாஜா சதம்... முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. அணி 255-4

தினத்தந்தி
|
9 March 2023 4:40 PM IST

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.

அகமதாபாத்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லபுஸ்சேன் 3 ரன்களில் அவுட்டானார்.

கேப்டன் ஸ்மித் 38 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேமரூம்ன் கிரீன் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார்.

மறுபுறம் உஸ்மான் கவாஜா தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 ஆவது சதமடித்து அசத்தினார். அவர் 251 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். கிரீன் 64 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்