இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 221/3
|இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஆலி போப் சதம் (103 ரன்) அடித்தார்.
லண்டன்,
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேனியல் லாரன்ஸ் மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் லாரன்ஸ் 5 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் ஆலி போப் களம் புகுந்தார். போப் - டக்கட் இணை அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. இதில் டக்கட் 86 ரன்னிலும், அடுத்து களம் புகுந்த ஜோ ரூட் 13 ரன்னிலும் அவுட் ஆகினர்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஆலி போப் சதம் அடுத்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்து தரப்பில் ஆலி போப் 103 ரன்னுடனும், ஹாரி புரூக் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.