தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; இங்கிலாந்து ஆடும் லெவனில் அறிமுக வீரராக ஹேரி புரூக் சேர்ப்பு
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் ஆடும் லெவனில் ஹேரி புரூக் சேர்க்கப்பட்டுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி அங்கு 3 ஒருநாள், 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 1 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் டெஸ்ட் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. காயத்தால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ள விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோக்கு பதிலாக அறிமுக வீரராக 23 வயதான ஹேரி புரூக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:
அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஓலி போப், ஜோ ரூட், ஹேரி புரூக், பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஓலி ராபின்சன், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.