< Back
கிரிக்கெட்
கடைசி டி20: அதிரடியில் மிரட்டல்..!  சுப்மன் கில் சதமடித்து அசத்தல்..!  இந்திய அணி 234 ரன்கள் குவிப்பு
கிரிக்கெட்

கடைசி டி20: அதிரடியில் மிரட்டல்..! சுப்மன் கில் சதமடித்து அசத்தல்..! இந்திய அணி 234 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
1 Feb 2023 8:44 PM IST

சுப்மன் கில் 63 பந்துகளில் ( 12 பவுண்டரி , 7 சிக்ஸர் ) 126 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார் ..

ஆமதாபாத்,

இந்தியாவில் விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக சுப்மன் கில் , இஷான் கிஷன் களமிறங்கினார். தொடக்கத்தில் இஷான் கிஷன் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடினார். கில் , திரிபாதி இருவரும் இணைந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .. சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.

மறுபுறம் கில் அரைசதம் கடந்தார். அதன்பிறகு அதிரடியில் மிரட்டிய அவர் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டு வான வேடிக்கை காட்டினார் . தொடர்ந்து பவுண்டரி , சிக்ஸர் அடித்த கில் சதம் அடித்து அசத்தினார். இது அவரது முதல் சர்வதேச டி20 சதம் ஆகும் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 234 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 63 பந்துகளில் ( 12 பவுண்டரி , 7 சிக்ஸர் ) 126 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார் .. தொடர்ந்து 235 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்