< Back
கிரிக்கெட்
கடைசி டி20 போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்..!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

கடைசி டி20 போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்..!

தினத்தந்தி
|
22 Dec 2023 6:46 AM IST

முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது

டிரினிடாட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் 4 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

19.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மோட்டி 3 விக்கெட்டும், ரசல், ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என கைப்பற்றியது.

மேலும் செய்திகள்