< Back
கிரிக்கெட்
கடைசி டி20 போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

கடைசி டி20 போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

தினத்தந்தி
|
13 Feb 2024 5:40 PM IST

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

பெர்த்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அந்த இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ரசல் (71 ரன்) மற்றும் ரூதர்போர்டு (67 ரன் ) ஆகியோரின் அதிரடி அரைசதத்தின் மூலம் 20 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 221 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மார்ஷ் 17 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஆரோன் ஹார்டி 16 ரன், ஜோஷ் இங்கிலிஸ் 1 ரன், மேக்ஸ்வெல் 12 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 81 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து டிம் டேவிட்டுடன் மேத்யூ வேட் ஜோடி சேர்ந்தார். இதில் டேவிட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 37 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 81 ரன்னும், இறுதி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் டேவிட் 19 பந்தில் 41 ரன்னும் எடுத்தன்ர். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

மேலும் செய்திகள்