< Back
கிரிக்கெட்
கடைசி டி20 போட்டி; யுஏஇ-க்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து...!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

கடைசி டி20 போட்டி; யுஏஇ-க்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து...!

தினத்தந்தி
|
20 Aug 2023 9:33 PM IST

நியூசிலாந்து - யுஏஇ அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. துபாயில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் யுஏஇ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாட் பெளஸ் மற்றும் டிம் செய்பர்ட் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் சாட் பெளஸ் 9 ரன், டிம் செய்பர்ட் 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து வில் யங், மார்க் சாம்ப்மென் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்த நிலையில் வில் யங் 56 ரன்னிலும், சாம்ப்மென் 51 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் யுஏஇ அணி களம் இறங்கி ஆடி வருகிறது.

மேலும் செய்திகள்