கடைசி டி20 போட்டி; நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்..!
|3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
மவுண்ட் மவுங்கானுய்,
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் வங்காளதேசமும், அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் நியூசிலாந்தும் ஆட உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் நாளை காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.