< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி : இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி : இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
10 July 2022 6:41 PM IST

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நாட்டிங்காம்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், அவேஷ் கான், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய்

இங்கிலாந்து அணி : ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன்), டேவிட் மாலன், பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், மொயின் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், ரிச்சர்ட் க்ளீசன், ரீஸ் டாப்லி

மேலும் செய்திகள்